இளவரசர் ஹாரி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை – தாயிடம் கதறி அழுத 5 வயது சிறுமி

இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே தம்பதியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி கதறி அழுகின்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு 600 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஹாரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி லோரா கதறி அழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி லோரா ஹாரி திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். அதற்கு அவர் தாய் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால் செல்ல முடியாது என பதிலளித்தார். இதனை கேட்ட லோரா கதறி அழுதார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!