வேட்பாளர்களுக்கு 4 நிபந்தனைகள் – சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நான்கு முக்கியமான விடயங்கள் தொடர்பான சத்தியக் கடதாசியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் அனைவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவ,

“அரசியலமைப்பு விதிகளை மீறக் கூடாது,, எந்தவொரு அரசாங்க நிறுவனத்துடனும், வணிக செயற்பாடுகளில் ஈடுபடக் கூ.டாது, நெறிமுறைக் கோட்பாடுகளின்படி செயற்பட வேண்டும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும், ஆகிய நான்கு அடிப்படை விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்து, வேட்பாளர்கள் சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதே இதன் நோக்கமாகும்.

அத்துடன், வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களையும் வேட்புமனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!