நகைச்­சுவை பேசும் ஒரு­வ­ருடன் விவா­தத்­துக்கு கோத்தா செல்­வதா? – கம்­மன்­பில

சஜித் பிரே­ம­தா­ச­ போன்ற சாதா­ரண மனி­த­னுடன் விவா­தத்­துக்கு சென்று கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் நற்­பெ­யரை பாதிப்­ப­டை­யச்­செய்ய நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

கோத்­த­பாய ராஜபக் ஷ முடி­யு­மானால் பகி­ரங்க விவா­தத்­துக்கு வர­வேண்டும் என சஜித் பிரே­ம­தாச விடுத்­தி­ருக்கும் சவா­லுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

முழு உல­கமும் தோற்­க­டிக்க முடி­யாது என தெரி­வித்த கொடூர யுத்­தத்தை மிகவும் சூட்­சு­ம­மான திட்­ட­மிடல் மூலம் தோற்­க­டித்­த­வர்தான் கோத்­தா­பய ராஜபக்ஷ். அதற்­காக அவர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி பட்டம் பெற்­றவர். அதே­போன்று கணனி விஞ்­ஞா­னத்தில் பட்­டப்பின் பட்டம் பெற்­றவர். அத்­துடன் சிங்­கப்பூர் மற்றும் சீன பல்­க­லைக்­க­ழ­கங்­களின் அழைப்­பின்­பேரில், நகர அபி­வி­ருத்தி மற்றும் பாது­காப்பு திட்டம் தொடர்­பாக ஆய்­வு­மேற்­கொண்­டவர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பேரா­சி­ரி­யர்கள் வைத்­தி­யர்கள் சட்­டத்­த­ர­ணிகள் போன்ற கல்­வி­மான்கள் இணைந்து உரு­வாக்­கிய அறி­ஞர்­களின் அமைப்­புதான் வியத்­மக என்­ப­தாகும். அந்த அறி­ஞர்கள் தங்­களின் தலை­வ­ராக கோத்­தா­பய ராஜ­பக்ஷ்­வையே தெரி­வு­செய்­து­காெண்­டார்கள். அதன் பிர­காரம் கோத்­தா­பய ராஜபக்ஷ் என்­பவர் இலங்­கையில் இருக்கும் அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் இருக்கும் சிறந்த அறிஞர்.

ஆனால் இவ்­வா­றான கல்­வி­ய­லா­ளரை விவா­தத்­துக்கு அழைக்கும் சஜித் பிரே­ம­தாச என்­பவர் யார். ஜனா­தி­பதி தேர்தல் வர­லாற்றில் மிவும் நகைச்­சு­வை­யான வேட்­பாளர். சிறு­பிள்­ளைத்­த­ன­மாக பேசும் இவ­ருக்கு தனது கொள்கை பிர­க­ட­னத்­தைக்­கூட இது­வரை வெளி­யி­ட­மு­டி­யாமல் இருக்­கின்­றது. செயற்­ப­டுத்த முடி­யாத வாக்­கு­று­தி­களை மாத்­தி­ரமே அவரால் தெரி­விக்­க­முயும்.

எனவே இவ்­வாறு நகைச்­சுவை பேசிக்­கொண்­டி­ருக்கும் ஒரு­வ­ருடன் கோத்­தா­பய ராஜபக்ஷ் போன்ற சிறந்த கல்­வி­மானை விவா­திப்­ப­தற்கு எவ்­வாறு அனுப்­பு­வது? அதனால் கல்விமான்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவரும் கோத்தாபய ராஜபக்ஷ்வை கல்வியறிவு இல்லாத சஜித் பிரேமதாசவுடன் விவாத்துக்கு அனுப்பி அவரின் நற்பெயரை அசிங்கப்படுத்திக்கொள்ள நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!