ஹிஜாப் அணியாததால்.. இளம்பெண்ணை முகம் குப்புற தள்ளி தாக்கிய பொலிஸார்…!

ஈரானில் இளம்பெண் ஒருவர் பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் சென்றதால், பொலிஸார் ஒருவர் அவரை முகம் குப்புற பிடித்துத் தள்ளி தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை அதிரவைத்துள்ளது.டெஹ்ரானிலிருந்து 30 நிமிட தொலைவிலிருக்கும் Shahr-e-Rey என்ற பகுதியில், இளம்பெண் ஒருவர் ஹிஜாப் அணியாமல் நடந்து சென்றுள்ளார்.

அதைக்கண்ட ஆண் பொலிஸார் ஒருவர், அந்த இளம்பெண்ணை நிற்கச் சொல்லியிருக்கிறார்.ஒரு பெண் பொலிஸாரை அழைக்க விரும்பிய அந்த பொலிஸார், அதுவரை நிற்கும்படி அந்த பெண்ணிடம் கூற, அந்த பெண் அதற்கு செவிகொடுக்காமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்திருக்கிறார்.

உடனே அந்த பெண்ணை பிடித்து இழுத்து, முகம் குப்புற தள்ளி தாக்கியுள்ளார் அவர். அத்துடன் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், அந்த பெண்ணை காப்பாற்ற முயலும் ஒரு இளைஞருக்கும் ஒரு குத்து விழுவதையும் காணமுடிகிறது.ஷரியா சட்டத்தை கடுமையாக பின்பற்றும் ஈரானில், ஹிஜாப் அணியாத பெண்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!