சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை – மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் தமக்கு கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான விளம்பரங்களை பிரசுரிக்க வேண்டாமென்றும், மதவழிபாட்டுத் தலங்களில் வேட்பாளர்களை ஊக்குவிக்க வேண்டாமென்றும் அவர் உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கால எல்லை நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததுடன் சுவரொட்டிகளையும், பதாதைகளையும், கட்டவுட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அமைதியான காலப்பகுதியில் பணம் செலுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பேஸ்புக், யூரியுப் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் மின் அஞ்சல் மூலம் உடனுக்குடன் உரிய ஊடகங்களுக்கு அனுப்பப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!