சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் கமல் குணரத்ன

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளதை அடுத்து, புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படவுள்ளார் என, கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

முன்னாள் அதிபர் சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்குப் பதிலாகவே, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசனை வழிநடத்தியிருந்தார். இவர் மீது போர்க்குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை எழுதி வெளியிட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து, வியத்மக அமைப்பை உருவாக்குவது மற்றும் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!