ஞான­சார தேரரை புதிய அர­சா­வது கட்­டுப்­ப­டுத்­துமா?: பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் கேள்வி

இன­வாத ரீதி­யில் ­அ­டா­வ­டித்­த­னத்தில் ஈடு­படும் ஞான­சார தேரரை புதிய அர­சா­வது கட்­டுப்­ப­டுத்­துமா என்று வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் கேள்வி எழுப்­பி­யுள்ளார். இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

அண்­மைக்­கா­லங்­களில் சமூக ஊட­கங்­களில் வெளிவந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் ஞான­சார தேரர் தன்­னு­டைய கடமை முடிந்து விட்­ட­தா­கவும் நடை­பெறப்­போகும் பொதுத் தேர்­த­லுடன் பொது­ப­ல­சே­னாவை கலைத்­து­விடப் போவ­தாகவும் தெரி­வித்­தி­ருந்தார். இதி­லி­ருந்து அவ­ரது சுயரூபம் வெளிப்­பட்­டு­ள்ளது.

முன்னர் ஞான­சார தேரர் தலை­மையில் தர்கா நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட தாக்­கு­தலின் போது அதன்­ பின்­ன­ணியில் இவர் இருந்தார் என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. இருந்தும் அப்­போ­தி­ருந்த அரசத் தலை­வர்கள் ஞான­சா­ர­தே­ர­ருக்கு எதி­ராக எந்த ஒரு நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

எனவே சிறு­பான்மை இனத்­த­வர்கள் மீது தனது அடா­வ­டிகள் மூலம் இன­வா­தங்­களை தூண்­டி­விட்டு தனிச்­சிங்­கள ஆட்­சியை அமைப்­பதே இவ­ரது நோக்கம் என்­பது இப்­பொ­ழுது வெளிப்­ப­டை­யா­கி­விட்­டது. மேலும் இவ­ரது பின்னணியில் நின்று செயற்­பட்­ட­வர்­களின் முகத்­தி­ரை­களும் வெளி­யாகி வரு­கி­றது.

அன்று தேர்தல் காலத்தில் நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய சர்ச்­சையில் ஞான­சார தேரர் மூக்கை நுழைத்­தது எதற்­காக என்ற சந்­தேகம் எழு­கி­றது? நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கல­வ­ரத்­திற்கு மூல­கா­ர­ண­மான இவர் அதே விட­யத்தை வைத்து சிங்­கள தேசத்தை உசுப்­பேத்தி விட முயன்­றி­ருக்­கின்­றாரா?

ஒரு தேர­ருக்கு தேவை­யான எந்த ஒரு அடிப்­படை நல்­லொ­ழுக்க விழு­மி­யங்­களும் இவ­ரிடம் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. சண்­டி­ய­ராக செயற்­படும் ஞான­சார தேரரை வந்­தி­ருக்கும் புதிய அர­சா­வது கட்­டுப்­ப­டுத்­துமா? என்­பதை அரசு மக்­க­ளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சிங்­க­ள­வர்­க­ளுக்கு பொருத்­த­மான தந்தை கிடைத்து விட்டார் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் சிறுபான்மை இனத்­த­வர்கள் அநாதைகளாக விடப்­பட்­டுள்­ளார்­களா? என்ற கேள்­வியை எழுப்ப வேண்­டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

இந்த நாடு தமிழ், சிங்­கள மொழி பேசும் மக்­க­ளுக்­கான நாடு. ­இ­ரண்டு ஆட்சி மொழி­களைக் கொண்ட நாடு. இங்கு சிங்­கள என்ற வார்த்­தையை மட்டும் பேசு­வது என்­பது இன­வாத கருத்துக்களை விதைப்பதாகும். உரிமைகளுக்காக போராடுபவர்கள் இனவாதிகள் அல்ல. தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை வழங்க தவறினால் அதன் உலக நீதி உங்களுக்கான பாடங்களை எதிர்காலத்தில் கற்றுத்தரும். அதே போல் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை ஞாபகத்தில் கொள்வது நல்லது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!