பார்வையாளர்கள் முன் 30 அடி உயரத்திலிருந்து விழுந்த இளம்பெண்….?

சர்க்கஸ் வீராங்கனை ஒருவர் பார்வையாளர்கள் முன் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பரிதாப சம்பவம் லண்டனில் நடைபெற்றது.அந்தரங்கத்தில் தொங்கி வித்தை காட்டும் இளம்பெண் சர்க்கஸ் வீராங்கனை ஒருவர் தொங்கிய ஊஞ்சல் வழுக்கியதால் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

அரங்கில் முன் வரிசையில் குழந்தைகள் அமர்ந்திருந்ததால், இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார்கள் அவர்கள்.சம்பவத்தையடுத்து, உடனடியாக சர்க்கஸ் அரங்கிலிருந்து பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

லண்டனின் ஹைட் பூங்காவில் நடைபெற்ற அந்த சர்க்கஸில் தவறி விழுந்த பெண்ணின் பெயர் Jackie Armstrong (35).வலியில் அவர் அலறித்துடிக்க, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரது நிலைமை என்ன ஆயிற்று என்பதை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!