வெள்ளை மாளிகை மீது பறந்த மர்ம விமானம்!

அமெரிக்க அதிபரின் இல்லம் மற்றும் அலுவலகமான வெள்ளை மாளிகையின் மேலே மர்ம விமானம் பறந்ததாக வந்த தகவலையடுத்து வெள்ளை மாளிகை மூடப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8.30 மணியளவில் மர்ம விமானம் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளை மாளிகை மூடப்பட்டது. தொடர்ந்து மாளிகையைச் சுற்றியிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மாளிகையின் உள்ளே பணியாற்றியவர்கள் ஆங்காங்கே இருக்குமாறு அறிவுத்தப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட விமானத்தைக் கண்டறிவதற்காக போர் விமானங்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. பின்னர் அரை மணி நேரத்திற்குப் பின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!