நிர்பயா வழக்கு: தலைமை நீதிபதி விலகல்!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே , ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று மதியம் விசாரித்தது. அக்‌ஷய குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், “இந்த வழக்கில் அரசியல், ஊடக அழுத்தம் இந்த வழக்கிலிருந்தது,” என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தாம் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

நிர்பயா தரப்பு சார்பாக பாப்டே உறவினர் அர்ஜூன் பாப்டே முன்பு ஆஜரானார், அதன் காரணமாக நீதிபதி விலகுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

யார் இந்த பாப்டே?

நாக்பூரில் பிறந்த பாப்டே, நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். இதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாப்டேவின் பெயரை பரிந்துரைத்தார். பாப்டே 18 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!