ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட காரணம் என்ன?..

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அவர்களின் பரோல் விண்ணப்பங்களை நிராகரிக்க என்ன காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு ஒரு மாதகாலம் பரோல் கோரிய விண்ணப்பத்தை, உள்ளாட்சித்தேர்தல் மற்றும் திருவிழாக்கள் வருவதால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு, 30 நாட்களுக்கு குறைவாக விடுப்பு கோரினால் வழங்கலாம் என கடந்த முறை கூறிய நிலையில், தற்போது பரோல் விண்ணப்பத்தை நிராகரிக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!