4-வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் முதல் 3 பெண் குழந்தைகளையும் கொன்ற தந்தை!

குஜராத்தில் மனைவி 4வதாக பெண் குழந்தை பெற்றதால் விவசாயி ஒருவர், தனது 3 மூத்த மகள்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ஜுனகத்(Junagadh) மாவட்டத்தில் உள்ள கம்பாலியா(Khambhalia) கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ரசிக் சோலங்கி. 35 வயதான இவருக்கும் இவரது மனைவிக்கும் 7, 5 மற்றும் 2 வயதில் 3 பெண் குழந்தைகள் இருந்தன.

கடுமையான நிதிநெருக்கடியை ரசிக் சோலங்கி சந்தித்து வந்த நிலையில் அவரது மனைவி 4வதாக கர்ப்பமுற்று மீண்டும் ஒரு பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிக் சோலங்கி, தனது மூத்த மகள்கள் 3 பேரையும் தனது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசி கொன்றுவிட்டு தானும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!