முஷாரபிற்கு மரண தண்டனை அளித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் – பாகிஸ்தான் அரசு கருத்து!

தேச துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. முஷாரப் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது ஷா, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் முஷாரப் இறந்து விட்டால், அவரது சடலத்தை சாலையில் இழுத்து வந்து நாடாளுமன்ற வளாகத்தில் 3 நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்ற கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தீர்ப்பு வெளியானவுடன் அது குறித்து தமது சட்டக்குழுவினருடன் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். அதை அடுத்து, இறந்தபின்னரும் தூக்கிலேற்ற தீர்ப்பளித்துள்ள நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என்றும், அவரை மாற்றுமாறும் நீதித்துறை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!