அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் : காமினி லொகுகே

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று அனைத்து இன மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும். இடைக்கால அரசாங்கம் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளின் பெறுபேறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கத்தை பெற்றுக் கொடுக்கும் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவினையும் கோரியது. ஆனால் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கப் பெறவில்லை. அதற்கு பல்வேறு அரசியல் ரீதியான காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்களில் பெரும்பாலான தரப்பினர் அரசியல் ரீதியான பாரம்பரிய தீர்மானங்களை தற்போது மேற்கொண்டுள்ளமை அரசியல் ரீதியான பாரிய மாற்றமாகும்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்படுகின்றன.

அமைச்சுக்களும், அரச திணைக்களங்களும் மக்களுக்கான முறையான சேவையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட பணிப்புரையின் நிமித்தம் முன்னெடுக்கின்றன. பொதுத்தேர்தல் தொடர்பில் தற்போது அனைவரது கவனமும் காணப்படுகின்றன.

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!