கனடாவில் பிரபல இளம் பாடகி மரணம் நடந்தது என்ன..?

கனடாவை சேர்ந்த பிரபல பாடகி 26 வயதில் உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கனடாவின் Nunavutவில் பிறந்து வளர்ந்தவர் கெல்லி பிரேசர் (26). இவர் பாப் பாடகியாகவும், பாடலாசியராகவும் இருந்து வந்துள்ளார்.கெல்லி சில ஆண்டுகளாக Manitobaவில் வசித்து வந்தார்.இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

ஆனால் அது தொடர்பான மேலதிக தகவல்களை கெல்லி குடும்பத்தார் வெளியிடவில்லை, முக்கியமாக அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் தெரியவில்லை என கூறினார்கெல்லி கடந்த 2014ஆம் ஆண்டு இசுமா என்ற பாப் ஆல்பம் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார், இதன் பின்னர் அவர் வெளியிட்ட அனைத்துக்கு பாடல்களும் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்தது.கெல்லியின் மரணத்துக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் அவர் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!