மரபணு திருத்தப்பட்ட குழந்தைகளை உருவாக்கிய சீன விஞ்ஞானிக்கு 3 ஆண்டு சிறை!

உலகில் முதன்முதலாக மரபணு திருத்தப்பட்ட குழந்தைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிக்கு சீன நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஷென்ஷென்(Shenzhen) சதர்ன் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஹி ஜியான்குயி, (He Jiankui ) கடந்த ஆண்டு, மரபணு திருத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரட்டை பெண் குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் செய்தார்.

அப்படிப் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் வராது என்பது அவரது வாதம். இந்த ஆய்வு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனித கருவில் மரபணு மாற்றம் நடத்தியது குற்றம் எனத் தீர்ப்பளித்து, ஜியான்குயிக்கு (He Jiankui) மூன்றாண்டு சிறைத்தண்டனையும், 4 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!