அந்த நால்வரையும் தூக்கிலிட நான் தயார்: ஆவலாக காத்திருக்கும் தூக்கிலிடும் வேலையாளி!

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை வழக்கில் குற்றாவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடூரர்கள் நால்வரையும் தூக்கிலிட தயாராகி வருகிறார், பெட்ஷீட் வியாபாரியான 58 வயது Pawan Jallad. இவர் மீரட்டை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் சுமார் 4 தலைமுறையாக குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையை செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட தான் தயாராக உள்ளதாக கூறியுள்ளார் Jallad. தண்டனையை நிறைவேற்றி வைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அதாவது கடிதம் இன்னும் தனக்கு வந்து சேரவில்லை என குறிப்பிட்டுள்ளார். விரைவில் அரசிடமிருந்து கடிதம் வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடிதம் கிடைத்த பின்னர் தண்டனை தேதிக்கு 3 நாட்கள் முன்னதாகவே நான் திகார் சிறைக்கு சென்று விடுவேன். அங்கு சென்று முதலில் தூக்கு மேடை மற்றும் தூக்குக் கயிறுகளை சரி பார்ப்பேன். அவற்றின் எடையையும் சரி பார்ப்பேன். தூக்குக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மணல் நிரப்பப்பட்ட சாக்குகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்துவோம். அவர்கள் இறக்கும் வரை தூக்கிலிடப்படுவார்கள்.

அவர்களை தூக்கில் போட போவதற்காக நான் சிறிதும் கவலைப்படவில்லை. இந்த கொடிய குற்றவாளிகளை கொல்வது சமுதாயத்துக்கு அழுத்தமான செய்தியை சொல்வதாக இருக்கும். மேலும் நான் செய்ய போகும் இந்த செயலால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மன அமைதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட அரசு Jallad-க்கு 1 லட்சம் ரூபாய், (ஒரு குற்றவாளியை தூக்கில் போட தலா ரூ.25,000) ஊதியமாக வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!