ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முறை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் திட்டமிடலுக்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.

அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறும், சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் நோக்கமாகும்.

அத்தகைய குடும்பங்களில் தொழிற் படையணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!