ஆளும்கட்சிக்கு வாய்ப்புக் கொடுக்கும் ஐதேகவினர்!

பொதுத்தேர்தலில் ஆளுந்தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எமது தரப்பிலிருக்கும் சிலர் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலை தற்போது ‘கோட் சூட்டில்’ மீண்டும் வந்திருக்கிறதா என்று கருதக்கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால் அதுகுறித்து யாரும் பேசவில்லை. மாறாக ரஞ்சன் ராமநாயக்கவின் கைது மற்றும் எமது கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் மாத்திரம் பெரிதுபடுத்திக் காண்பித்து, ஏனைய முக்கிய பிரச்சினைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அவதானம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது.

மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுந்தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எமது தரப்பிலிருக்கும் சிலர் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றார்களா என்ற சந்தேகமும் தற்போது தோன்றியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!