பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பந்துல

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடியாது என்று தெரிவித்து தேயிலை தொழிற் துறையில் இருந்து விலகிச்செல்லும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால் அவ்வாறான தோட்டங்கள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வரி மற்றும் உர மானியங்கள் உள்ளிட்டவை காரணமாக தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உயர்த்த தோட்ட நிறுவனங்களுக்கு முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!