கேட்டது 87 கோடி- கிடைத்தது 17 கோடி!

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 87 கோடி ரூபா நிதி கோரப்பட்ட போதும், 17.4 கோடி ரூபா நிதியை விடுப்ப்பதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரால் யாழ் மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசால் கொண்டுவரப்பட்ட சப்ரி கமக் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட 435 கிரம அலுவலகர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் மக்களால் கோரப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

இந்நிலையில் இந்த 689 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியிலிருந்து ஒரு பகுதி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வேலைகளின் முன்னேற்ற அறிக்கைக்கு அமைய மிகுதி நிதி விடுவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் செயலாளரால் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!