33 மாணவர்களுக்கும் ஒவ்வொரு மணி நேரமும் பரிசோதனை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவின் வுஹான் நகரத்தில் ,இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் ஆரம்பகட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தியத்தலாவ இராணுவ முகாமின் விசேட தங்குமிட நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வார காலத்திற்கு அங்கு தங்க வைக்கப்படவுள்ள அவர்களின் உடல் நிலை நிலை குறித்து மணித்தியாலத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, வுஹான் மாகாணத்தில் அடைப்பட்டிருந்த 33 மாணவர்களையும் இலங்கைக்கு அழைத்துவந்த பிரதான இரண்டு விமானிகள் உள்ளிட்ட 16 பேர் அடங்கிய குழுவினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வைரஸின் வீரியத்தை கண்டுகொள்ளாமல் இலங்கை பிரஜைகளை காப்பாற்ற அவர்கள் சுயமாக முன்வந்து வுஹான் பகுதிக்கு சென்று மாணவர்களை மீட்டு வந்தனர். வுஹான் பகுதிக்கு செல்ல முன்னர் அவர்கள் விசேட உடற் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் நோயாளர்களை பராமரிக்க வேண்டிய விதம் குறித்தும் அந்த விமான குழுவுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்ததன் பின்னர் அவர்கள் தற்போது தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பு மிகுந்த சேவையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு பாராட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!