ஜெனிவாவில் அரசுக்கு ஆப்புவைக்க கூட்டமைப்பினர் திரைமறைவில் சதி! நிமல் சிறிபாலடி சில்வா

இம்முறை ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டால் இலங்கை ஆபத்தைச் சந்திக்காது. எனினும், எமது அரசை அங்கு சிக்கவைக்க சில நாடுகளுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திரைமறைவில் சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அனைத்து சதி நடவடிக்கைகளையும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து அரசு முறியடித்தே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசுடன் எந்த நேரமும் பேச்சு நடத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அது தொடர்பில் கவனம் செலுத்தாத கூட்டமைப்பினர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன்தான் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்கள்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள். இங்குள்ள எந்தப் பிரச்சினைக்கும் ஜெனிவா ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது. அரசுதான் தீர்வை வழங்கும். இதை உணர்ந்து கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!