பிணைமுறி மோசடி; தொடர்புடையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணைமுறி மோசடிகள் குறித்த தடயவியல் அறிக்கையின் பிரகாரம் பிணைமுறி மோசடியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு போதியளவு தரவுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பிணைமுறி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட தடயவியல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள பிணைமுறி மோசடியின் பிரகாரம் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கும் 2016ஆம் திகதி மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கும் இடையில் 9081மில்லியன் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடியுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்கள் தொடர்பிலேயே தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மறைமுகமாக பணத்தை வாங்கியவர்கள் மற்றும் தொலைபேசிமூலம் உரையாடியவர்கள் தொடர்பில் கூறப்படவில்லை.

பிணைமுறி மோசடி தொடர்பில் மறைமுகமாகவும் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளவர்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் போதியளவு தரவுகள் உள்ளன. ஆகவே, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க முடியும் என்றார்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!