பிரதமர் மகிந்தவுக்கு புதுடெல்லியில் வரவேற்பு – இன்று மோடியை சந்திக்கிறார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச 4 நாட்கள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். அவரை விமான நிலையத்தில் இந்திய மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோட்ரே பூங்கொத்துடன் வரவேற்றார்.

இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்திக்கும் பிரதமர் ராஜபக்ச, நண்பகலில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். அதன்பின் நாளைஇந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பான வரவேற்பு அளித்து விருந்து அளிக்கவுள்ளார்.

பிரதமர் மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ச இடையே நடக்கும் இந்த சந்திப்பில் இரு நாட்டு கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, அரசியல், வர்த்தகம், மேம்பாடு, கலாச்சாரம், சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மேம்பாட்டுக்கு சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

நேற்றிரவு பிரதமர் மகிந்த ராஜபக்சவை, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!