இலங்கையின் தூதுவர் நியமனத்தை சுவிஸ் நிராகரிக்கும்?

ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சி.ஏ.சந்திரப்பிரேமவை அப்பதவியில் ஏற்றுக் கொள்வதற்கு, சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளின்போது மனித உரிமைகள் சட்டத்ததரணிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலைகளுக்கு காரணமான இராணுவ ஆதரவு இரகசிய அணியான மரண தண்டனைக் குழுவில் சி.ஏ.சந்திரப்பிரேம அங்கம் வகித்தார் என்று கூறப்படுவதை அடுத்தே அவரை அப்பதவியில் ஏற்பதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!