எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிய முதலமைச்சர்!

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மழுப்பலான பதில்களை வழங்கிச் சமாளித்தார்.

இளையோர் மாநாட்டை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னோடியாக பொதுநூலக கருத்தரங்கு மண்டபத்தில் நேற்று தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெற்றதுடன், இதில் இளைஞர்களும் யுவதிகளும் பங்குபற்றியிருந்தனர். இந்த மகாநாட்டில் இளைய சமுதாயத்துடன் சேர்ந்து சில முக்கியமான விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளதாக இங்கு கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது எழுத்துவடிவில் மாத்திரமே இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு விடயத்தை கூறிவிட்டு, நடைமுறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நிலைமையே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, வட மாகாணத்தை மையமாக கொண்ட எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மழுப்பலான பதில்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!