அரசின் 3 சட்டமூலங்களுக்கு அனுமதி

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மூன்று சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தலைமையில் நேற்றைய தினம் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திலேயே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசூரிய, காஞ்சன விஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிமல் ரத்னாயக்க, மயந்த திஸாநாயக்க, பேராசிரியர் ஆஷு மாரசிங்க மற்றும் கலாநிதி மொஹமட் இஸ்மயில் ஆகியோர் அந்தக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்

இதற்கமைய, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு திருத்தச் சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு திருத்தச் சட்டமூலம் என்பனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளன.

இதனையடுத்து அந்தச் சட்டமூலங்கள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென, நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!