ஈஸ்டர் தாக்குதல் ; 80 வீத விசாரணைகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு ( ஈஸ்டர்) தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 12 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்,

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் FBI நிறுவனம் , அவுஸ்திரேலியாவின் பிராந்திய பொலிஸ் உட்பட சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,சம்பவத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 153 பேர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!