மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை – மஹிந்த

நாட்டுக்கு கொண்டுவரும் மருந்துகளின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் மருந்து கொள்வனவு தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் குறைந்த விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும் அதிக விலைக்கு மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நூறு மடங்கு அதிக பணம் இதற்காக செலுத்தப்பட்டு மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன.

அதேபோல், மருந்துகளின் தரம் தொடர்பில் பரிசோதிக்க வேண்டியுள்ளது.அதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!