ஸ்ரீலங்கா அரசு வகுத்துள்ள சர்வதேச வியூகம்! புலம்பெயர் தமிழர்களின் நிலை என்ன?

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தடையை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கொந்தளித்து நிற்கிறது தென்னிலங்கை அரசியல் களம்.

சவேந்திர சில்வா மீதான இத்தடையினை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு சாதகமாக்கி தேர்தல் மேடைகளில் கொட்டுவதற்கு தயாராயிருக்கிறது ஒரு தரப்பு.

மறுபுறத்தில் சவேந்திர சில்வா மீதான தடையை காரணம் காட்டி ஐ.நாவின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிரடியாக அறிவித்தும்விட்டது,

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுக்கும் திட்டங்களை எவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களும், களத்திலிருக்கும் அரசியல் தரப்பினரும் கையாளப் போகிறார்கள்? தமிழர் தரப்பின் அரசியல் களம் இனி எவ்வாறு பயணிக்கப் போகிறது என்னும் பெரும் கேள்விகள் தற்போது எழத் தொடங்கிவிட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!