சிட்னியில் பதறவைக்கும் சம்பவம்…புகையிரதத்திலிருந்து பெட்டிகளிற்கு கீழே விழுந்த கைக்குழந்தை!

சிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தையை மூவர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பலரின் மனதை தொட்டுள்ளது.

இன்று காலை வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து கைக்குழந்தையொன்று விழுந்துள்ளது.

என்ன செய்வது என தெரியாமல் தாயார் தவித்தவேளை மூவர் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து பெட்டிகளின் கீழே சிக்குண்டிருந்த குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில்தவித்துக்கொண்டிருந்த ஏனைய பயணிகள் தாய்க்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவேளை குழந்தை மீட்கப்பட்டது.

இதனையடுத்து சிட்னியின் புகையிரத நிலைய ஊழியர்கள் குழந்தையை மீட்டவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எனது மகள் புகையிரதத்தில் பயணம் செய்தது இதுவே முதல் தடவை என்றும், இனி சிறிது காலத்திற்கு அவர் புகையிரதத்தில் பயணம் செய்யமாட்டார் என தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புகையிரதத்தின் கீழ் குழந்தை விழுந்துவிட்டாள் தயவுசெய்து புகையிரதத்தை நிறுத்துங்கள் என தாயார் கதறிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பயணிகளும் புகையிரதத்தை நிறுத்துமாறு சத்தமிட்ட நிலையில் , அது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்கள் நடந்து முடிந்ததாகவும் சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!