நுவரெலியாவில் களமிறங்குகிறாரா மேர்வின் சில்வா?

“சண்டைக்கோழிக்கு எந்த ஆடுகளத்தில் வேண்டுமானாலும் ஆடமுடியும்.அதுபோலவே நானும். ஐக்கிய தேசியக்கட்சி எந்த மாவட்டத்தை வழங்கினாலும் அந்து போட்டியிடுவேன்.” – என்று மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஐ.தேகவின் ரணில் ஆதரவு உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதன்பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நான் ஒரு சிங்கள, பௌத்தன். தென்மாகாணத்தில் பிறந்தவன். அரசியல் என்பது எனது இரத்தத்திலேயே ஊறிப்போயுள்ளது.

வருகின்ற பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானை சின்னத்தில் போட்டியிட உத்தேசித்துள்ளேன்.

சண்டைக்கோழியை எந்த ஆடுகளத்தில் விட்டாலும் அது சிறப்பாக ஆடும். நானும் அப்படிதான். ரணில் விக்கிரமசிங்ககூறும் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன். அது அநுராதபுரமாக இருந்தாலும், நுவரெலியாகவிருந்தாலும் பரவாயில்லை. எங்கும் வெற்றிபெறுவேன்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும்போது அக்கட்சிக்காக பாடுபட்டேன். தற்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் அரசியல் பயணம் தொடர்கின்றது. ஆகவே, அக்கட்சியின் வெற்றிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். ” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!