சீன மருத்துவர்களின் பெரும் சாதனை! வெளியானது மகிழ்ச்சியான தகவல்- நெகிழ்ச்சியில் சீன மக்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 103 வயதான மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக சீன மருத்துவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொடூரமான வைரஸாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொரோனாவிற்கு இதுவரை 4000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், உலகில் 105 நாடுகளுக்கும் அதிகளவில் இந்த வைரஸ் பரவியிருக்கிறது. ஆனால், சீனாவிற்குள் இதன் தாக்கம் வெகுவாக குறைந்துவருதாக சீன அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவில் ஒரு வாரத்திற்கும் குறைவாக சிகிச்சை பெற்ற 103 வயதான மூதாட்டி வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவக் கல்லூரியின் லியுவான் இணைப்பு மருத்துவமனையில், மார்ச் 1 ம் திகதி அன்று 103 வயதான ஜாங் குவாங்பென் என்கிற மூதாட்டி கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, அந்த நேரத்தில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மருத்துவர் ஒருவர் ஊடகங்கள் பேட்டியளித்துள்ளார்.

செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததன் பலனாக குணமடைந்த அவர், நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன்மூலம் இதுவரை சீனாவில் குணமடைந்த மிகவும் வயதான கொரோனா வைரஸ் நோயாளி மற்றும் இதற்கு முன் குணமடைந்த 101 வயது நபரை அடுத்த இரண்டாவது நபர் என்கிற பெருமையும் பெற்றுள்ளார்.

மருத்துவர்கள் வெளியிட்டுள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினை அந்நாட்டு ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டுவருகின்றன.

சீனா ஆசியான் நோயாளி என அமெரிக்க பத்திரிகையாளர்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!