கொரோனா பீதி: 5 பேர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்!

கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பை கருத்தில் கொண்டு மும்பை, தானே, நவி மும்பை, புனே, பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை மூடுமாறு மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தப்பிச் சென்றனர், பின்னர் அவர்கள் போலீசார் கண்டுபிடிக்கப்பட்டனர்.

நாக்பூரின் மாயோ பொது மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து ஐந்து பேர் தப்பி உள்ளனர். இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறும் போது :- 5 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது மேலும் நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை . நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து விட்டோம், அவர்கள் நிர்வாகத்தால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள். நாக்பூரில் 16 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!