முகக் கவசம் அணியாதோரை துரத்தும் பொலிஸ், இராணுவம்!- அவசியமில்லை என்கிறது சுகாதாரத்துறை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த போது, முகக்கவசங்கள் அணியாமல் செனவர்கள் வங்கிகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

எனினும் இது தவறான நடவடிக்கை என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னமும் இது சமூக பரவல் நோயாக மாறவில்லை. எனவே முகக்கவசங்களை அணிவது அத்தியாவசியமில்லை. முகக் கவசங்களை அணியவேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் அறிவிக்கப்படும்.

எனவே வர்த்தக நிலையங்கள் முகக்கவசங்களை அணியவில்லை என்பதற்காக பொதுமக்களை திருப்பியனுப்ப கூடாது. அதற்கு பதிலாக சமூக இடைவெளி என்ற ஒரு மீற்றருக்கு ஒருவர் என்ற நடவடிக்கையை வலியுறுத்தலாம் என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள், சந்தைகளுக்கு முக கவசம் அணியாமல் சென்றவர்களை, பொலிசாரும், இராணுவத்தினரும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!