இலங்கையில் முகக் கவசத்தை அணிய வேண்டியது கட்டாயமா?

இலங்கையில் முகக் கவசத்தை அணிய வேண்டிய கட்டாய நிலை இதுவரை ஏற்படவில்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தேசிய மத்திய நிலையம் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவசியமான சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிய வேண்டியது தேவையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசியமற்ற சந்தர்ப்பங்களில் முகக் கவசம் பயன்படுத்தப்பட்டால், அவசியமான சந்தர்ப்பங்களில் முகக் கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன், யாரையும் முகக் கவசம் அணிய வேண்டாம் என தான் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் காரியாலயங்களில் முகக் கவசம் அணியாதவர்களை உள்ளே வரத் தடை விதிப்பது தவறான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான இடங்களில் சமூக இடைவெளியை பேணுவதே சிறந்த நடவடிக்கையாகும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!