ஏப்ரல் 10 வரை ஆபத்து! – அதுவரை ஊரடங்கு தொடரும்

ஏப்ரல் 10 ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய ஆபத்தான காலக்கட்டமாக உள்ளது. எனவே அதுவரையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதி ஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித் தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!