சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்!

எட்டு பொதுமக்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில், கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைகள் தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டபோதும் இறுதியில் சுனில் ரட்நாயக்கவுக்கு மாத்திரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் சுனில் ரட்நாயக்கவின் விடுதலையானது இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிறைவேற்றாது என்பதற்கான ஒரு முன்னுதாரணமாகவே பார்க்க வேண்டியுள்ளதாக Rupert Colville குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்காக தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய செயலானது, மனித உரிமை மீறலுக்கான தண்டனையை முடிவுக்கு கொண்டுவருவதில் அந்த நாடு மேற்கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையும் மேலும் குறைத்து மதிப்பிடுவதற்கு வழியேற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!