சமூக இடைவெளி முக்கியம்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசியசெயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!