சமூக வலைத்தள செயற்பாடுகள் குறித்து காவல்துறை விடுத்துள்ள தகவல்..!

சமூக வலைத்தளத்தின் ஊடாக போலியான தகவல்கள் மற்றும் கடும்போக்கான கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, அவ்வாறான நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பதில் பொலிஸ்மா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு விமர்சனங்களை முன்வைத்தும், அவர்களின் சில குறைபாடுகளை திரிவுபடுத்தி வீடியோகவாக வெளியிட்டதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே, போலியான தகவல்கள் மற்றும் கடும்போக்கான கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!