கொரோனா அபாயம்! திடீர் மரண விசாரணையாளர்களுக்கும் வழங்க வேண்டும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் திடிர் மரண விசாரணையாளர்களாக பணிபுரிகின்ற உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பான ஒரு சீருடையினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென தீடிர் மரண விசாரணையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மொஹமட் பசிர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த திடிர் மரணவிசாரனையாளர்கள் சங்கத்தின் செயலாளர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயினை ஒழிக்க நாட்டின் ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் முழுமையான அர்பணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் தீடிர் மரண விசாரணையாளர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கருதி முழுமையான பங்களிப்பை நாங்களும் ஆற்றிவருகிறோம்.

இதுபோன்ற சந்தர்பங்களில் தீடிர் மரணங்கள் ஏற்பட்டால் எங்களுடைய கடமைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த சந்தர்பத்தில் இந்த கொரோனா தொற்று திடிரென எம்மை போன்ற உத்தியோகத்தர்களுக்கும் தொற்றினால் சேவையினை செய்யமுடியாத ஒரு நிலை ஏற்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!