கொரோனா நிவாரண நிதியாக தனது சொத்தில் 28 சதவீதத்தை வழங்கிய ட்விட்டர் தலைவர்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் மொத்தம் ஒடுங்கிப்போயிருக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ ட்விட்டர் தலைவர் ஜாக் டோர்சே தமது சொத்தில் 28 சதவீதத்தை நன்கொடையாக அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பில் கேட்ஸ் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ட்விட்டர் தலைவர் ஜாக் டோர்சே தமது மொத்த சொத்தில் இருந்து 28 சதவீதத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இது சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 43 வயதான டோர்சே செவ்வாய் அன்று தமது ட்விட்டர் பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த முயற்சியின் முதன்மையாக நோக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிப்பதில் கவனம் செலுத்தும் எனவும், அதன் பின்னர் சிறுமிகளின் உடல் நலம் மற்றும் கல்வி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் ஜாக் டோர்சே.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!