பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட கனடிய இளம்பெண்!

கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட இளம்பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லாக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதில் 23 வயதான பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் Heidi Stevenson -னும் அங்கு வந்துள்ளார்.

பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான Heidi-ன் மரணம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த அவர் கனடாவின் ரியல் ஹிரோ என பலரும் சமூகவலைதளங்களில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!