கொரோனா அச்சம்! கொழும்பில் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது

City hospital with place for text – modern vector illustration. Medical center on urban background, nice park with trees. Blue sky with clouds. Clinic with first aid. Concept of healthcare and emergency
பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமையினைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் 73 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதுடன், 104 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!