கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாட்டு இராணுவம் தேவையில்லை!

கொரோனாவை வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவ உதவி எதுவும், தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனாவை வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தனது இராணுவ அணிகளை அனுப்பத் தயார் நிலையில் வைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன,

கொரோனாவை வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு எந்த வெளிநாட்டு இராணுவத்தின் உதவியும், தேவையில்லை .

“கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு, இராணுவத்தை நிலைநிறுத்துமாறு வேறு நாடுகளின் உதவியை நாட வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில், இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசார் தமது திறன்களை ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.

இந்த அவசரகால சூழ்நிலையை கையாள்வதில், இலங்கை இராணுவம் ஏற்கனவே அவர்களின் நிபுணத்துவத்தையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தை அனுப்புவது குறித்து, இந்தியாவுடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!