இன்றும் நாளையும் முழு நேர ஊரடங்கு!

இன்றும் நாளையும், நாடு முழுவதும், முழுமையாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 8.00 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு, 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிவரை அமுலில் இருக்கும் என்று , ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிu ஏனைய 18 மாவட்டங்களில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும்,தினமும் இரவு 8.00 மணி தொடக்கம் காலை 5.00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!