வவுனியாவில் இன்று கடைகள் அடைப்பு – போக்குவரத்தும் இராது!

ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், மூடப்பட்டிருக்கும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை சிப்பாய் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக, வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைகள் என்பன இன்று மூடப்பட்டிருக்கும் என்றும், பொதுப் போக்குவரத்தும் இடம்பெறாது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!