தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுவோர் இன்று முதல் கைது!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது தனிமைப்படுத்தல் வழிகாட்டல்களை பின்பற்றாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் சமூகத்தில் தனிமைப்படுத்தலை பேணும் வகையில் அரசு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, முச்சக்கரவண்டியில் பயணிப்போர் எண்ணிக்கை, ஒன்று கூடுதல், பலர் நெருக்கமாக இருத்தல் மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களை மீறுவோரே கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியே நடமாடுவதற்கு, அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையைப் பயன்படுத்துவது சட்டமல்ல என்றும், அறிவுறுத்தல் மட்டுமே எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த அறிவுறுத்தலை மீறுவோர் கைது செய்யப்பட மாட்டார்கள். என்றும், ஆனாலும் உத்தரவுகளை பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!