கோவிட்-19: இந்தியாவின் தற்போதைய நிலவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,435 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் செவ்வாய் மாலை தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 934 ஆகியுள்ளது என அந்த அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

* இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ளனர். 21,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கடந்த 24 மணி நேரத்தில் பேர் 62 இறந்துள்ளனர், 1,543 பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நேற்று மட்டும் 62 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது இதுதான் அதிகம்.

* இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்துள்ளவர்கள் விகிதம் 23.3% ஆக உள்ளது.

* இந்தியா முழுவதும் 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

* மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

* இதுவரை இந்தியாவில் பதிவான 934 மரணங்களில் 741 பேர் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இறந்துள்ளனர்.

* கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக 10.9 நாட்கள் ஆவதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!